இளசுகளின் கனவாக..??

Today I read this in Facebook;

Its a status from one of my friend நந்த மீனாள்

ஒரு பெரிய ஐ.டி நிறுவனத்தில் கொத்தடிமை அடிமைபோல் வேலை பார்ப்பதுதான் இன்றைய கால இளசுகளின் கனவாக இருக்கிறது.

வேதனை.

This my reply.

அது அவர்களின் கனவு இல்லை; கனவாக ஆக்க பட்டு விட்டது… இதற்க்கு மூல காரணம் ஆராய்ந்தால் நம் சமுகமே எனக்கு தெரிகிறது…

அடுத்த வீட்டு பிள்ளளைகளை பார்த்து ஒப்பிட்டு பேசும் பெற்றோர்கள் தான் இதை ஆரம்பித்து வைக்கின்றனர்… அதன் பின் நமது கல்வி முறை… நன்றாக யோசித்து பாருங்ககள்… நாம் படிக்கும் போது, ஆசிரியரோ இல்லை அடுத்த வீட்டுக்காரரோ.. என்ன சொன்னர்கள்…. “நல்லா படிக்கணும் டா…. அப்போ தான் நல்ல வேலைக்கு போகலாம்.. இல்லனா மாடு தான் மேய்க்கணும்… அதனால் தான் நம் இளைய சமுகம் இப்படி ஆகிவிட்டது… வீணாக அவர்களை குறை கூராதீர்கள்…

 

 

 

இறைவனுக்கு ஏன் இத்தனை பச்சாதாபம்….!!!

நம்மையெல்லாம் படைத்தவன் இறைவன் என்றால்…
ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வு….?

ஒருவனிடம் நானுறு தலைமுறைக்கு பணம்….
மற்றவனுக்கோ அடுத்த வேளை சோற்றிற்கே வழியில்லை…

இதற்கெல்லாம் காரணம் பணத்தை படைத்த மனிதன் தான் என்றால்….
அதை ஏன் இறைவன் தடுக்கவில்லை…?

நீயும் கடவுள்… நானும் கடவுள் என்றால்…
இன்னும் ஏன் தெருவில் சிறார் கையேந்தும் அவலநிலை…?

விவேகானந்தர் கூற்று போல்….
ஒரு விதவையின் கண்ணிரை துடைக்க முடியாத…
ஒரு அனாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோறிட முடியாத…
கடவுளித்திலோ.. சமயத்திலோ எனக்கு துளியும் நம்பிக்கையில்லை…

உன்னுடன் இருக்கிறேன்…

அந்தி மங்கிவிட்டது… அடுத்த நாளும் முடிந்துவிட்டது… ஆனால்
இன்னும் நான் தனிமையில்…
இது எப்படி சாத்தியமாயிற்று…?

நீ என்னிடம் சொல்லிச் செல்லவில்லை…
யாரிடமாவது சொல்லி அனுப்பு
ஏன் என்னை துருவத்தில் விட்டாய் என்று….

காதலில் நான் தவறினேனா…? இல்லை காதல் தவறியதா…?
யோசிக்கும் நேரத்தில் என் காதுகளில் கேட்கும் குரல் சொல்கிறது…

நீ தனிமையில் இல்லை – நான்
உன்னுடன் இருக்கிறேன்…
நீ எங்கு சென்றாலும் உன்னுடன் வருவேன்…
நீ என்னை பிரிந்தாலும்.. என் இதயத்தை பிரிய முடியாது…

நான் உன்னுடன் இருக்கிறேன்…!!!

வெளிநாட்டு அலப்பரை… :D

வெளிநாட்டுக்கு போயிட்டு வந்துட்டு ,நம்ம ஆளுக பண்ணுற அலப்பரைய ..சும்மா அனுபவிச்சு எழுதிருக்காங்க ….
இதை எழுதிய புண்ணியவானுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்…

கையில மினரல் வாட்டரை வச்சிக்கிட்டே திரியிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்திரமா வச்சிக்கிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிக்கிட்டு அல்லது தள்ளிக்கிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுறதே, சர்க்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறயா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துக்கோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி “ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்”னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு “எக்ஸ்சூஸ்மீ” ன்னு சொல்றது… (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

“செளக்கியமா”ன்னு கேக்காம.. “ஹாய்”ன்னு சொல்றது, “லட்ச”த்துக்கு பதிலா.. “மில்லியன்ல” சொல்றது, தயிருக்கு பதிலா.. “யோகர்டு”ன்னு சொல்றது, “ஹய்வே”க்கு பதிலா “ஃப்ரீவே”ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா “கோக்கோ (அ) பெப்சியோ” இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. “தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா” ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி… அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு…

எதை சொல்ல வந்தாலும்.. “இப்படிதான் துபாய்ல…”, ன்னு ஆரம்பிப்பாங்க!!

விலை ம(க்)கள்…

மொதல்லயே சொல்லிக்கிறேன், ‘ஸோ கால்ட் ராமன்கள்’ எங்காவது போய் அரற்றிக்கொள்ளுங்கள். இங்கு அனுமதி இல்லை.

https://twitter.com/VilaiMagal
என்ற கணக்கிலிருந்து கீச்சிய பதிவுகளின் தொகுப்பு. (முழுத்தொகுப்பு அல்ல)

• பூணூல் தரித்தவன், முகச் சவரம் செய்பவன், பிச்சையெடுத்துண்பவன். எல்லோரும் எனக்கு கீழ்சாதியினர் தாம்.
• ஏமாற்றிப் போன காதலியை மறக்க வருவோர் கண்களில் பரவச சந்தோசம் பார்த்திருக்கிறேன். அவர்தம் பற்கடிகள் அவ்வளவாக வலிப்பதில்லை.
• வருவது வெற்றிலை குதப்பும் வாயோ, கஞ்சா அடக்கிய கடைவாயோ.. வினைபுரியும் முன்னர் கட்டாயம் வேண்டும் ஒரு கவளம் சாராயம்..
• நானொரு கவிதை. எம் குலம் ஒரு கவிதைத் தொகுப்பு. எம் வாழ்க்கை ஒரு காவியம். நாங்கள் காவியத் தலைவிகள்.
• “உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்று சொன்னவனெல்லாம் அப்படிச் செய்திருந்தால் இந்நேரத்திற்கு நான் ஆயிரம் திரௌபதி.
• இவ்வருடம் மட்டும் எண்பத்து ஏழாவது முறையாக ஒருவன் ஐயப்ப மாலையை கழற்றி வைக்கிறான். சாமி சரணம்.
• கொங்கைகள் தளர்ந்துபோய், அல்குலும் விரிந்துபோய் காலம் எனைப்பார்த்து கைகொட்டி சிரிக்கும் நாளும் வரும். சிகரெட் வடுக்கள் மட்டுமே நிரந்தரம்.
• முலைப்பால் கட்டிய பெண்டிருக்காக இன்னொரு கூட்டமும் இங்குண்டு. வானத்திற்கு கீழேயாவும் வக்கிர உலகம் மட்டும் தானா?
• கன்னிப் பெண்ணுடன் உறவு கொண்டால் ஆண்மை பெருகுமென, லட்சங்களை கையில் கொண்டு ஒரு கிழவர் கூடம் திரிகிறது. 12,13 வயசுப் பெண்கள் தான் பாவம்.
• நேற்று வந்தவன் வாத்சாயனார், கஜுரஹோ சிற்பங்கள்,புனிதம் என்றேதேதோ பேசிக்கொண்டிருந்தான்.கேட்ட காசு கொடுப்பானா என்ற எண்ணம் மட்டும் என்னிடம்.
• பரத்தையரை எத்தினம் இச்சமூகம் விபச்சாரி என்றழைக்கத் தொடங்கியதோ அன்று தான் பெண்ணடிமைத்தனம் மாமரமாக வானோங்கி நின்ற நாள்.
• நேற்றிரவு கடவுள் கதவு தட்டினார்.விடிவுகாலம் பிறந்து விட்டது என்று மகிழ்ந்த கணம் அவன் கண்கள் காட்டி கொடுத்து விட்டன.சரி சரி உள்ள வா என்றேன்.
• வாழ்ந்து முடித்து, காலனை எதிர்பாத்து கட்டிலில் வீழ்ந்து கிடக்கும் ஒரு பழைய விலைமகளை இன்னமும் விடாமல் புணர்ந்து கொண்டிருக்கிறது காலம்…
• சிறுவயதில் பூ தொடுத்ததுண்டு.ஏனோ பல வருடங்களாக கடவுளர்கள் பிடிப்பதில்லை.குறிப்பாக வருகிறவர்கள் கழட்டிவைக்கும் ஐயப்ப மாலையென்றால் அருவருப்பு
• பேருந்து நிறுத்ததிற்கு சற்றப்பால் நின்று உன் கண்களை உற்றுநோக்கும் பெண்ணொருத்தி உண்டெனில் அது நானாகத்தான் இருக்க முடியும்.
• இப்போதுதான் வெளியேறினார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர். அரைமணிநேரமும் படுத்திருந்த போர்வையின் நூல் பிரித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாக.
• கழுத்தின் கீழ் மொய்த்திருக்கும் ஆயிரமாயிரம் கண்களே, அதற்க்கும் சற்றுமேலே துளிர்விட்டிருக்குமென் ஒரே ஒருசொட்டு கண்ணீரை கண்டீரோ?
• கொள்ளை அழகு,செல்ல ராட்சஷியென்கிறாய்.. கலவி முடிந்து உடையணியும் போது மிஸ்டுகால் நண்பனை திரும்பவழைத்து “மேட்டர்க்கு வந்தேண்டா” என்கிறாய்.
• தனியாக படுத்திருந்த நேற்றைய இரவிலும் பற்பல கால்கள் கொண்ட குற்றவுணர்ச்சி ஒரு செந்நிற அட்டைப்பூச்சி போல் உடலெங்கும் ஊர்ந்து கொண்டிருந்தது.
• கணக்கெடுக்கிறோம், காப்பாற்றுகிறோம் கதைசொல்லு என வருபவன்களின் கண்களின் ஒரு புள்ளியில் காமம் நான் பார்த்தேன்.
• இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.செய்கிறேன். பணம் பத்தும் செய்யும்.
• வெளிநாட்டவருக்கு ஏனோ அபிரிமிதமான இந்திய தோல் மோகம். கருப்பர்கள், மூன்றாம் உலகம் என்பதெல்லாம் ச்சும்மா.
• நானொரு பெரும் விளையாட்டு மைதானம். விளையாட வருபவை எல்லாம் விட்டில் பூச்சிகளே.
• யாமொரு வேடந்தாங்கல். வருடந்தோறும் காமப்பறவைகள் இளைப்பாற வருமொரு பேருடல்தாங்கி.
• விட்டம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கொரு சேதி தரும்.
• நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தென்னிந்திய நீலப்படங்கள் பெரும்பாலானவை உள்ளூருகல்ல வெளிநாட்டுக்கென ஏமாற்றி எடுக்கப்பட்டவை தான் • • • •
• கணவனால் கைவிடப்பட்டவள்
ஓர் இளைஞனை வைத்துக்கொள்கிறாள் புறம்பேசித் திரிகிறது அவளால் கதவடைபட்டக் கூட்டம்… #காமக்கடும்புனல்
• மரணப்படுக்கையில் இருப்பவரின் ஞாபகத்திலாடும் கடைசி முகங்களில் ஒன்று ஒரு வேசியினுடையதாகவும் இருக்கலாம்…