-என் மரணத்தில்–

-என் மரணத்தில்–

எழுதுவதற்கு இதை
இன்னும் காலங்கள்
இருக்கலாம்

பழுதுற்றுப்
பயனின்றிப்
பிணமாய் நான்விழ
இன்னும் வருடங்கள் ஆகலாம்

அவசியமாய் இது
நடப்பதற்கே
அவசரமாய் இதை
எழுதுகிறேன்
அலட்சியமாய் விடாமல்
என் இலட்சியமாய் ஏற்று
முடிப்பீர்

இறந்து நான்
இருக்கையில்
மறந்தும்
யாரும் அழுது
என் மரணத்தினை
இழிவு செய்யாதிருங்கள்

ஒரு நாள் என்னைச்
சென்னையில் வையுங்கள்
மறுநாள் என்னைக்
காரைக்காலில் புதையுங்கள்

வலத்திய இடத்தில்
ஒலிபெருக்கிகள் வையுங்கள்
தமிழிசைப் பாடல்கள்
ஒலிமுழக்கம் செய்யுங்கள்

தமிழாய் வாழும்
தமிழறிஞ்ர்கள்
ஊரும் உறவும்
என் உடல் சூழும் வேளை

தமிழ்ச் செழுமை
தமிழின்ழ்ப் பெருமை
வந்தவர் அறிய
உரையாற்றி
உரையாற்றி
நில்லுங்கள்

உணர்வுற்று
சில தமிழன்
பிறப்புற்றான்
என்னால்
என் பிணம்கூட
உளம் மகிழும்
பிதையுங்கள்

ஊர்வலமாய்
என்னுடல் போகும் போது
தமிழ் உணர்வுப் பாடல்கள்
உடன்வரச் செய்யுங்கள்

வழியில் ஒரு நொடி
அரசலாற்றின்
அந்த நீர்
ஒலி
கேட்க நிறுத்துங்கள்

உயிர்க்காற்று போன
என் உடலில்
அரசலாற்றுக்
காற்று
சில நொடி
படச் செய்யுங்கள்

புதைக்கும்பொது
என் இசைப்பாடல்
ஒன்று ஒலிக்கப்
புதையுங்கள்

ஈழம் பிறக்கும்
நாள்முன்
நான் இறக்கும்
நாள் வந்தால்

ஈழம் பிறக்கும் நாள்
“ஈழம் பிறந்தது”
என்று
என் கல்லறையில்
எழுதுங்கள்

இந்த எழுத்துக்கள்
படர்ந்த பிந்தான்
மண்ணுள்
எனுடல்
செரிக்கும்
நம்புங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s