விலை ம(க்)கள்…

மொதல்லயே சொல்லிக்கிறேன், ‘ஸோ கால்ட் ராமன்கள்’ எங்காவது போய் அரற்றிக்கொள்ளுங்கள். இங்கு அனுமதி இல்லை.

https://twitter.com/VilaiMagal
என்ற கணக்கிலிருந்து கீச்சிய பதிவுகளின் தொகுப்பு. (முழுத்தொகுப்பு அல்ல)

• பூணூல் தரித்தவன், முகச் சவரம் செய்பவன், பிச்சையெடுத்துண்பவன். எல்லோரும் எனக்கு கீழ்சாதியினர் தாம்.
• ஏமாற்றிப் போன காதலியை மறக்க வருவோர் கண்களில் பரவச சந்தோசம் பார்த்திருக்கிறேன். அவர்தம் பற்கடிகள் அவ்வளவாக வலிப்பதில்லை.
• வருவது வெற்றிலை குதப்பும் வாயோ, கஞ்சா அடக்கிய கடைவாயோ.. வினைபுரியும் முன்னர் கட்டாயம் வேண்டும் ஒரு கவளம் சாராயம்..
• நானொரு கவிதை. எம் குலம் ஒரு கவிதைத் தொகுப்பு. எம் வாழ்க்கை ஒரு காவியம். நாங்கள் காவியத் தலைவிகள்.
• “உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்று சொன்னவனெல்லாம் அப்படிச் செய்திருந்தால் இந்நேரத்திற்கு நான் ஆயிரம் திரௌபதி.
• இவ்வருடம் மட்டும் எண்பத்து ஏழாவது முறையாக ஒருவன் ஐயப்ப மாலையை கழற்றி வைக்கிறான். சாமி சரணம்.
• கொங்கைகள் தளர்ந்துபோய், அல்குலும் விரிந்துபோய் காலம் எனைப்பார்த்து கைகொட்டி சிரிக்கும் நாளும் வரும். சிகரெட் வடுக்கள் மட்டுமே நிரந்தரம்.
• முலைப்பால் கட்டிய பெண்டிருக்காக இன்னொரு கூட்டமும் இங்குண்டு. வானத்திற்கு கீழேயாவும் வக்கிர உலகம் மட்டும் தானா?
• கன்னிப் பெண்ணுடன் உறவு கொண்டால் ஆண்மை பெருகுமென, லட்சங்களை கையில் கொண்டு ஒரு கிழவர் கூடம் திரிகிறது. 12,13 வயசுப் பெண்கள் தான் பாவம்.
• நேற்று வந்தவன் வாத்சாயனார், கஜுரஹோ சிற்பங்கள்,புனிதம் என்றேதேதோ பேசிக்கொண்டிருந்தான்.கேட்ட காசு கொடுப்பானா என்ற எண்ணம் மட்டும் என்னிடம்.
• பரத்தையரை எத்தினம் இச்சமூகம் விபச்சாரி என்றழைக்கத் தொடங்கியதோ அன்று தான் பெண்ணடிமைத்தனம் மாமரமாக வானோங்கி நின்ற நாள்.
• நேற்றிரவு கடவுள் கதவு தட்டினார்.விடிவுகாலம் பிறந்து விட்டது என்று மகிழ்ந்த கணம் அவன் கண்கள் காட்டி கொடுத்து விட்டன.சரி சரி உள்ள வா என்றேன்.
• வாழ்ந்து முடித்து, காலனை எதிர்பாத்து கட்டிலில் வீழ்ந்து கிடக்கும் ஒரு பழைய விலைமகளை இன்னமும் விடாமல் புணர்ந்து கொண்டிருக்கிறது காலம்…
• சிறுவயதில் பூ தொடுத்ததுண்டு.ஏனோ பல வருடங்களாக கடவுளர்கள் பிடிப்பதில்லை.குறிப்பாக வருகிறவர்கள் கழட்டிவைக்கும் ஐயப்ப மாலையென்றால் அருவருப்பு
• பேருந்து நிறுத்ததிற்கு சற்றப்பால் நின்று உன் கண்களை உற்றுநோக்கும் பெண்ணொருத்தி உண்டெனில் அது நானாகத்தான் இருக்க முடியும்.
• இப்போதுதான் வெளியேறினார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர். அரைமணிநேரமும் படுத்திருந்த போர்வையின் நூல் பிரித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாக.
• கழுத்தின் கீழ் மொய்த்திருக்கும் ஆயிரமாயிரம் கண்களே, அதற்க்கும் சற்றுமேலே துளிர்விட்டிருக்குமென் ஒரே ஒருசொட்டு கண்ணீரை கண்டீரோ?
• கொள்ளை அழகு,செல்ல ராட்சஷியென்கிறாய்.. கலவி முடிந்து உடையணியும் போது மிஸ்டுகால் நண்பனை திரும்பவழைத்து “மேட்டர்க்கு வந்தேண்டா” என்கிறாய்.
• தனியாக படுத்திருந்த நேற்றைய இரவிலும் பற்பல கால்கள் கொண்ட குற்றவுணர்ச்சி ஒரு செந்நிற அட்டைப்பூச்சி போல் உடலெங்கும் ஊர்ந்து கொண்டிருந்தது.
• கணக்கெடுக்கிறோம், காப்பாற்றுகிறோம் கதைசொல்லு என வருபவன்களின் கண்களின் ஒரு புள்ளியில் காமம் நான் பார்த்தேன்.
• இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.செய்கிறேன். பணம் பத்தும் செய்யும்.
• வெளிநாட்டவருக்கு ஏனோ அபிரிமிதமான இந்திய தோல் மோகம். கருப்பர்கள், மூன்றாம் உலகம் என்பதெல்லாம் ச்சும்மா.
• நானொரு பெரும் விளையாட்டு மைதானம். விளையாட வருபவை எல்லாம் விட்டில் பூச்சிகளே.
• யாமொரு வேடந்தாங்கல். வருடந்தோறும் காமப்பறவைகள் இளைப்பாற வருமொரு பேருடல்தாங்கி.
• விட்டம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கொரு சேதி தரும்.
• நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தென்னிந்திய நீலப்படங்கள் பெரும்பாலானவை உள்ளூருகல்ல வெளிநாட்டுக்கென ஏமாற்றி எடுக்கப்பட்டவை தான் • • • •
• கணவனால் கைவிடப்பட்டவள்
ஓர் இளைஞனை வைத்துக்கொள்கிறாள் புறம்பேசித் திரிகிறது அவளால் கதவடைபட்டக் கூட்டம்… #காமக்கடும்புனல்
• மரணப்படுக்கையில் இருப்பவரின் ஞாபகத்திலாடும் கடைசி முகங்களில் ஒன்று ஒரு வேசியினுடையதாகவும் இருக்கலாம்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s